சைலேந்திரபாபு - வின் சாகசங்கள்...
வாசகர்களுக்கு வணக்கம் !
நான் உங்கள் வாசகன்.
நம் பிறப்பு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என நினைத்து முன்னேறுபவர்களில் இவரே முதன்மையானவர். தற்பொழுது தமிழக அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் DGP ஆக இருக்கும் சைலேந்திர பாபு-வின் கதை ஜூன் 5 1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் தொடங்கியது. அரசுப்பள்ளி என்றால் எல்லோருக்கும் அலட்சியமாகப் பார்க்கும் காலத்திலும் அவர் அரசு மேல்நிலை பள்ளியில்(குழித்துறை) பள்ளிப்படிப்பை முடித்தார்.அதன்பின் மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருடைய "Missing Children" ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இந்தியக் காவல் பணி அதிகாரி ஆக (IPS) பணியில் சேர்ந்த சைலேந்திர பாபு அவர்கள் ஐதராபாத் தேசிய காவல் அகாடமி மூலம் பயிற்சிப் பெற்றார். காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ADSP) கோபிச்செட்டிபாளையம், சேலம் திண்டுக்கல்லில் பணியாற்றி, காவல்துறை கண்காணிப்பாளராக செங்கல்பட்டு, சிவகங்கை, கூடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பணியாற்றினார், பின்னர் காவல்துறை துணை ஆணையாளர் ஆக அடையாரிலும் பின் காவல்துறை துணைத் தலைவர் (DIG) ஆக விழுப்புரம் சரகத்திலும் இணை ஆணையாளராக சென்னையிலும் பணியாற்றினார், கரூர் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு காவல்துறை துணைத் தலைவர் ஆக திருச்சியிலும் பின் சென்னை வடக்கு மண்டலத்தின் காவல்துறை துணைத் தலைவர் ஆக பணியாற்றுவதற்கு முன் முன்பு காவல்துறை தலைவராக (IG) கோவையிலும் பணியாற்றினார்.
ஏப்ரல் 2014 ல் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனராக (Assistant Director of General Police) பதவி உயர்வுப் பெற்ற சையிலேந்திர பாபு தற்போது தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படைக்குழுவின் தலைமை இயக்குனராக பணியில் இருந்தார். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் திரிபாதி 30 ஜூன் 2021 அன்று ஓய்வு பெறுவதையொட்டி, சைலேந்திர பாபுவினை புதிய தலைமை இயக்குநராக அரசு நியமித்துள்ளது. விருதுகள் :
✓ கடமையுணர்வுக்கான இந்தியக் குடியரசுத்தலைவரின் விருது,
✓ உயிர் காத்த செயலுக்கு இந்தியப் பிரதமரின் விருது,
✓வீரதீர செயலுக்கான தமிழக முதல்வரின் விருது ,
✓ கடமை உணர்வுக்கான தமிழக முதல்வரின் விருது,
✓சிறப்பு அதிரடிப்படையில் வீரதீர செயலுக்கான தமிழக அரசின் விருது,
சைலேந்திர பாபு காக்கி சட்டை அணிந்ததற்காக பெருமைப்பட்ட சம்பவம் எது தெரியுமா?
அதையும் அவரே கூறியுள்ளார். 1997ல். சிவகங்கையில் சில காவல்துறையினருடன் செல்லும்போது, ஏற்கனவே பாலத்திலிருந்து பேருந்து ஒன்று ஏரிக்குள் விழுந்திருந்தது. நாங்கள் போவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னரே அது விழுந்திருக்க வேண்டும். பேருந்தின் பெரும்பகுதி மூழ்கியிருந்தது. ஏற்கனவே பலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருந்தனர். என்னுடன் வந்திருந்த அனைவரும் சிறந்த நீச்சல் வீரர்கள். நாங்கள் அனைவரும் சற்றும் தாமதிக்காமல் ஏரியில் குதித்து அவர்களைக் காப்பாற்றினோம். 18 பேரைக் காப்பற்றிய அந்தத் தருணம் மிகவும் சிறப்பானது. ஆனால், பலரைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தமும் உண்டு என்று பேட்டியில் கூறியிருந்தார். எழுதிய நூல்களில் சில:
✓ நீங்களும் இந்தியக் காவலர் பணியாளர் ஆகலாம் -2008
✓ Boys & Girls - Be Ambitious -2009
✓ Principles of success in interview -2009
உடலினை உறுதி செய்
✓ அமெரிக்காவில் 24 நாட்கள்
✓ நீங்களும் ஐ பி எஸ் அதிகாரி ஆகலாம்
✓ சாதிக்க ஆசைப்படு இவரது மனைவி சோபியா சைலேந்திரபாபு ஆவர். இவருக்கு திவான் , அதியன் என இரு மகன்கள் உள்ளனர். இளைஞர்களுக்கு வழிகாட்டும் இவரைப் பற்றி பார்க்க வேண்டுமென்றால் இந்தத் தளம் போதாது..
அவரின் சேவை தொடரவும் பணி சிறக்கவும் இதன் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம் 🙏🙏🙏.
Comments
Post a Comment
Please login with your Google account before leaving comments, only then you'll be able to edit 'em later.