கடவுளைக் கண்டேன்..!
வாசகர்களுக்கு வணக்கம்..🙏
நான் உங்கள் வாசகன். இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் பிள்ளைகளாக வளர்க்கப்படுகின்றன. பல உயிர்கள் கடவுளை கண்ணாக கருதுகின்றன. சில உயிர்கள் சிறிதும் பொருட்படுத்தாமல் நடக்கின்றன.
எல்லோருக்கும் ஒரு ஆசை உண்டு கடவுளை எப்படியாவது காண வேண்டுமென்று, அந்த ஆசையில் எனக்கு கொஞ்சம் பேராசை உண்டு. கடவுளிடம் சில மணித்துளிகளாவது சிரித்து மகிழ வேண்டும் என்பதே அந்தப் பேராசை.
கடவுளை கண்ணெட்டிய தூரமெல்லாம் தேடினேன். கால் பட்ட இடமெல்லாம் ஓடினேன். நாட்கள் பல கடந்தன, காலமும் விரைந்து ஓடின.
ஒரு நாள் என் பேராசை பேரின்பமானது, அந்தக் கடவுளை நான் கண்டேன். ஓடிய கால்களுக்கு ஓய்வு கொடுத்தும், தேடிய கண்களுக்கு விடுப்பு கொடுத்தும், சில நிமிடங்கள் மரத்தடியில் சாய்ந்தேன்.
கடவுள் என்பவர் யார் ? உன்னை படைத்தவர், உன் மேல் அன்பு கொள்பவர். இப்போது கூறு .! கடவுள் என்பவர் உன்னைப் பெற்ற தாயைவிட வேறு எவர் இருக்க முடியும் ? இவ்வுலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் தாயின் மூலமாகவே மட்டுமே மலர்கின்றன எனவே் கடவுளான தாய்க்கு நான் எழுதும் ஒரு சிறு கவிதை,
மாதங்களாய் சுமந்து வாரங்களாய் தவழ்ந்து வந்தோனை மடியில் பெற்றெடுத்தவளே.!
உன் அடியின் கீழ் அல்லாமல் மடியின் மேல் வளர்த்தவளே.!
அம்மா எனும் சொல்லுக்கு அரியாசனமாய் உயர்ந்தவளே.!
பாசம் என்னும் படிப்பை பணமின்றி படித்தவளே.!
மகன் என்னும் மலரை மலராக்கி மகிழ்ந்தவளே.!
அன்பு என்னும் மந்திரத்திற்கு மறுபெயர் பெயர்த்தவளே.!
ஆசை என்னும் ஊஞ்சலில் என்றும் நிறைந்தவளே.!
சினம் எனும் சீற்றத்தை சிதைத்தவளே.!
மனம் எனும் மாற்றத்தை மறுத்தவளே.!
நீ என்றும் வாழ்க..!
உன் புகழ் பரவ பாடுகிறேன்..!!
இப்படிக்கு,
வாசகன் (செ.அஜித்குமார்)
Comments
Post a Comment
Please login with your Google account before leaving comments, only then you'll be able to edit 'em later.