பாரதியின் ஆத்திச்சூடி
மகாகவி பாரதி, 20-ம் நூற்றாண்டின் விடுதலை கவி, அவரது பெரிய படைப்பாக போற்றப்பட்டது புதிய ஆத்திச்சூடி. ஆத்திச்சூடியில் எழுச்சி மிகு வரிகள் பல இடம் பெற்று இருந்தது. அதில் இடம்பெற்ற சில வரிகளை காண்போம்.
ஆத்திசூடி வரிகள்:
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளை
பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்
கத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திரத் தோ¢ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேலுல்
கைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்
சௌரியந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்
ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்
தொன்மைக்கு அஞ்சேல்¢
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
நினைப்படு முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்ம இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்து கொள்
முனயிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொ டேல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவஞ்சொய்
மோனம் போற்று
மௌட்டியந் தனக்கொல்
யவனர்போல் முயற்சி கொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தேர்ச்சி கொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசிபல வென்றுணர்
ரூபஸ் செம்மைசெய்
ரேகையில் கனிகொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
நன்றி...
Comments
Post a Comment
Please login with your Google account before leaving comments, only then you'll be able to edit 'em later.